News August 9, 2024
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2914 கனஅடியில் இருந்து 6532 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.43 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காகவும் பாசனத்துக்காகவும் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1005 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 19 பவானிசாகர் அணை 70வது ஆண்டு நிறைவுசெய்கிறது.
Similar News
News September 16, 2025
ஈரோட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! ALERT

ஈரோடு மாவட்டத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.16) 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக இருக்க அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!
News September 16, 2025
ஈரோடு: டிகிரி முடித்தால் UPSC நிறுவனத்தில் வேலை!

ஈரோடு மக்களே.., மத்திய அரசின் ‘UPSC’ நிறுவனத்தில் ‘Accounts Officer’ பணிக்கு 35 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.47,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.2ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க <
News September 16, 2025
ஈரோட்டில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

ஈரோடு: பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களுக்கு வரும் செப்.19ஆம் தேதி ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் விவசாய நிலங்களை நில அளவைத்துறை மூலம் அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் மனு வழங்கலாம்.