News April 12, 2024
பழைய ஓய்வூதியம் என்னவானது: அன்புமணி

சேலம், மெய்யனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் அடுத்த தலைமுறையை காக்க வேண்டுமென்றால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
Similar News
News December 8, 2025
சேலம் GH-ல் பணம் கேட்டு தொல்லையா? இதை பண்ணுங்க!

சேலம் GH-ல் சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் அங்கு பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள்,காவலர்கள், ஓட்டுநர்கள் என பலரும் நோயாளிகளிடம் பணம் கேட்டு தொல்லை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதே போல் உங்களிடம் யாரேனும் பணம் கேட்டால் உடனடியாக 72001-18256 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம், அல்லது 72001 18256 என்ற எண்ணுக்கு WhatsApp பண்ணுங்க.இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 8, 2025
சேலத்தில் நாளை மின் தடை : உங்கள் பகுதி இருக்கா?

சேலம் மக்களே நாளை (டிச.09), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது: மேட்டூர், ஆர்.எஸ். துணை மின் நிலையம், மேச்சேரி துணை மின் நிலையம், மல்லியக்கரை துணை மின் நிலையம், உடையாப்பட்டி துணை மின் நிலையம்,மேட்டுப்பட்டி துணை மின் நிலையம், கருப்பூர் துணை மின் நிலையம், ஆடையூர் துணை மின் நிலையம்!SHAREit
News December 8, 2025
வாழப்பாடியில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!

சந்திரபிள்ளைவலசு பகுதியைச் சேர்ந்த போர்வெல் ஆப்பரேட்டர் கார்த்திக் (26) ரங்கனூர் பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.சி.,பட்டதாரியான கிருத்திகா (20 என்பவரை கடந்த கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் இவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியறி திருமணம் செய்து கொண்டு நேற்று வாழப்பாடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.


