News April 19, 2025
பழனி: பெண் சிசுவை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்

பழனி அருகே சண்முக நதி சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வாகன ஓட்டி ஒருவர் சென்று பார்த்தபோது பையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் குழந்தையின் சிசுவை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.25) கோவிலூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியபட்டி, உசிலம்பட்டி, சத்திரப்பட்டி, ஆத்தூர், விருப்பாச்சி, புலியூர்நத்தம், அம்பிளிக்கை, செம்பட்டி, , கசவனம்பட்டி, மேட்டுப்பட்டி, பூதிபுரம், வடமதுரை, அடியனூத்து, நாகல்நகர், செங்குறிச்சி, சிலுவத்தூர், செந்துறை, பிள்ளையார்நத்தம், காந்திகிராமம், தொப்பம்பட்டி, சின்னாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு. SHARE IT!
News November 24, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்களின் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (நவம்பர் 23) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், பட்டியலில் கொடுக்கப்பட்ட உதவி எண்களை தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளைப் பெறலாம். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இதற்காக அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தியுள்ளது.
News November 23, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது, அந்த வகையில் (நவம்பர் 23) இன்று,”மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்ப்போம் விபத்தில் இல்லா பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


