News March 19, 2024
பழனி: பக்தர்கள் வருகை குறைவு

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் இரண்டாம் நாள் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பழனிக்கு பக்தரின் வருகை குறைந்துள்ளது. கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது.
Similar News
News October 20, 2025
திண்டுக்கல்: ‘இந்த’ தவறுகளை செய்யாதீர்கள்!

திண்டுக்கல் மக்களே தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கானது. இந்நாளில் கோபப்படுவது, சண்டையிடுவது தவிர்க்கவேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு தான் பூஜைகள் செய்ய வேண்டும். அழுக்கு அல்லது அலட்சியம் உண்டானால் நன்மை கிடைக்காது என்பது ஐதீகம்; மேலும் இரவில் தீபம், விளக்குகளை ஏற்றி வீட்டை ஒளிர வைக்க வேண்டும். அந்த நேரத்தில் வீட்டில் இருட்டாக வைத்தல் தவிர்க்கப்பட வேண்டும். இதனை ஷேர் பண்ணுங்க!
News October 20, 2025
திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987 தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News October 20, 2025
திண்டுக்கல்லில் பூ மார்க்கெட் நிலவரம்!

திண்டுக்கல் சுற்றியுள்ள சிங்கம்பட்டி, அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வீரக்கல், வண்ணம்பட்டி வடக்கம்பட்டி, ஆகிய இடங்களில் விளைச்சல் செய்யப்படுகிறது. இன்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளி மாவட்ட விற்பனை அவர்கள் அதிகமாக குவிந்தனா் இன்று பூக்கள் விலை அதிகமாக உள்ளது. மல்லி ரூபாய் 1200, சம்பங்கி 600, வாடாமல்லி 200, ஆகிய விலைகளில் விற்பனையாகிறது.