News March 28, 2024

பழனி கிரிவல பாதை வழக்கு: மாற்றம்

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப் பாதை பொதுநல வழக்கை வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுரேஷ்குமார் அமர்வு விசாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் மதுரை நீதிமன்ற பொதுநல வழக்கு விசாரணையில் ஆர் சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இனி கிரிவலப் பாதை வழக்கை விசாரிக்கும். மேலும் கிருஷ்ணகுமார் நீதிபதி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 21, 2025

மின்சாரம் தாக்கி பெண் மற்றும் பசு மாடு பலி

image

திண்டுக்கல்: பாப்பனம்பட்டியைச் சேர்ந்த விக்னம்மாள் (50) என்பவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் இருந்த மின்கம்பி அறுந்து அவ்வழியாக சென்ற விக்னம்மாள் மற்றும் அவரது பசுமாடு மீது விழுந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 20, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று 20-04-2025 இரவு 11.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…

News April 20, 2025

காதலியை ஏமாற்றிய இளைஞர் கைது!

image

பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர் திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது  23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அந்தப் பெண் கர்ப்பமானர். இந்தநிலையில் விவேக்  அப்பெண்ணை விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விவேக்கை திருப்பூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

error: Content is protected !!