News December 4, 2024

பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருக்கோயிலை சுற்றி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் பக்தர்கள் செல்வதற்கு சிரமமாக இருந்தது. இதனை அடுத்து நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கோயில் கிரிவலப் பாதை சுற்றியுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.

Similar News

News October 29, 2025

திண்டுக்கல் வீட்டில் நுழைந்த உடும்பு!

image

திண்டுக்கல் மா, 23வது வார்டு ஆர்,வி.நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் மதுரை வீரன் கோவில் எதிரே உள்ள வீட்டில் (அக்.29) இன்று காலை உடம்பு ஒன்று நுழைந்தது. இதைக் கண்ட குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர். மேலும் திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடும்பை உயிருடன் பத்திரமாக பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

News October 29, 2025

திண்டுக்கல் காவல்துறை சமூக வலைதள அறிவுரை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல் (அக்.29) வழங்கியுள்ளனர். வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவது, மது அருந்தி வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகத்தில் செலுத்துவது போன்றவை விபத்துக்கு காரணமாகின்றன என்பதால், இத்தகைய செயல்களை தவிர்த்து பாதுகாப்பாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News October 29, 2025

திண்டுக்கல்: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள் APPLY NOW!

image

திண்டுக்கல் மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்!

error: Content is protected !!