News August 19, 2024
பழனியில் கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

பழனி கீரனுார் அருகே உள்ள புங்கமுத்துரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வேலுச்சாமி (10) நேற்று பழனி அ.கலையம்புத்தூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். மாலை அக்ரஹாரம் பகுதி அருகே உள்ள கிணற்றருகில் வேலுச்சாமி சென்றபோது எதிர்பாராத விதமாக அதில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்து சிறுவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
ஒட்டன்சத்திரம் அருகே உரம் தின்ற ஆடுகள் பலி!

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை மலையாளம், விக்னேஷ், முனியப்பன் ஆகியோர் நேற்று வழக்கம் போல் மேய்ச்சலுக்காக விட்டு வந்த ஆடுகளில், அப்பகுதியில் இருந்த உரம் கலந்த அரிசியை சாப்பிட்ட மூன்று ஆடுகள் மர்மமாக உயிரிழந்தன. தகவல் அறிந்த இடையக்கோட்டை கால்நடை மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகளை பரிசோதித்துப் புதைத்தனர். இறப்புக்கான காரணம் பின்னர் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 5, 2025
திண்டுக்கல்லில் ஒரே நாளில் நடந்த பயங்கர சம்பவம்!

திண்டுக்கல் இந்திரா நகர் மாரிமுத்து (50) நேற்று முன்தினம் வெளியில் சென்றபோது, மர்மநபர் வீட்டில் நுழைந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகைகளை திருடினார். அதேநாள் சொப்பணதேவி வீட்டில் ரூ.1 லட்சமும் திருடப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி மூலம் மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகர் சதீஷ்குமார் (24) என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். திருடப்பட்ட நகை, பணமும் மீட்கப்பட்டன.
News December 5, 2025
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே சடலம்!

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். முன்பு கடந்த 2ம் தேதி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த வடக்கு போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி உதயகுமார்(48) என்பதும், சில மாதங்களுக்கு முன்பு வீடு விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


