News December 31, 2024

பழனியில் காணிக்கை ரூ.4.67 கோடி

image

பழனி முருகன் கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடக்கிறது. இந்த மாத டிச.26, 30 இரு நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.4 கோடியே 67 லட்சத்து 49 ஆயிரத்து 356, வெளிநாட்டு கரன்சி 1,069, தங்கம் 1.012 கிலோ, வெள்ளி 17.062 கிலோ கிடைத்தது என பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News December 21, 2025

திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திண்டுக்கல், வத்தலகுண்டு, சிவஞானபுரம் புதூரை சேர்ந்தவர் செல்லகண்ணு. இவர் தனது மனைவி, மகனுடன் பைக்கில் வத்தலகுண்டு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். மேலகோயில்பட்டி பிரிவில் வந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் செல்லகண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி, மகன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 21, 2025

திண்டுக்கல் மக்களே: காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக ஊடக தளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை எளிதில் கண்டறிவதற்கும், சிசிடிவி கேமரா மிக அவசியமானது என காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில், சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்துள்ளனர்.

News December 21, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் நேற்று (டிசம்பர் 20) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை (டிசம்பர் 21) காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளாலாம்.

error: Content is protected !!