News April 21, 2025
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது!

பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து & கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்ராஜா(25), சிவக்குமார்(23), மாரிசாமி(21), அருண்குமார்(37), ஜேம்ஸ்(27), நாகேந்திரன்(27) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 8, 2025
வேடசந்தூர் அருகே 24 வயது வாலிபர் விபரீத முடிவு!

வேடசந்தூர் அருகே சுள்ளெறும்பு, முருநெல்லிக்கோட்டை பகுதியில் பழையகோட்டையைச் சேர்ந்த சண்முகம் மகன் பூபதிராஜா (வயது 24) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலையம் விரைந்து சென்று, அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 7, 2025
திண்டுக்கல் காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (நவ-07) சமூக வலைதளம் மூலம் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பொதுஇடங்களில் இலவச Wi-Fi இணைப்புகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தது. இல்லையெனில் செல்போன்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பிறரால் கண்காணிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.
News November 7, 2025
திண்டுக்கல்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இதை அனைவர்க்கும் SHARE பண்ணுங்க!


