News November 24, 2024
பழனிக்கு ரூ.120 இல் ரயில் பயணம்

திண்டுக்கல் – கோவை சிறப்பு மெமு ரயில் மூலம் நெல்லைப் பயணிகள் ரூ.120 செலவில் பழனி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில்- கோவைக்கு பகலில் செல்லும் ரயிலில் நெல்லையிலிருந்து ஏறும் பயணிகள் மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல்லில் இறங்கி அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் மெமோ ரயிலில் ஏறினால் 3 மணிக்கு பழனிக்கு செல்ல முடியும். இதற்கு நேரடி டிக்கெட் ரூ.120 மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
நெல்லையில் ரூ.69 கோடியில் பிரம்மாண்ட நூலகம்

நெல்லையில் ரூ.69 கோடியில் காயிதே மில்லத் பெயரில் பிரம்மாண்ட நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் ஐகிரவுண்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடத்தை அமைச்சர்கள், அதிகாரிகள் இதற்கு தேர்வு செய்தனர். இப்போது நூலகம் அமைக்க அரசு டெண்டர் விடுத்துள்ளது. அதில் 2 அடுக்கு கட்டடத்தில் படிப்பகம், மினி திரையரங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு அறை, ஆய்வரங்கம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளது.
News November 7, 2025
மாநகர இரவு காவல் சேவை அதிகாரிகள் எண்கள்

திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் உதவி சேவை பணிக்கான அதிகாரிகளை விவரங்களை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவுபடி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விபரங்களும் தரப்பட்டுள்ளன. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை இரவு தொடர்பு கொள்ளலாம்.
News November 7, 2025
முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு இன்று முதல் நடைபெறுகிறது. குரூப் 2-வில் 50 காலிபணியிடமும். குரூப் 2ஏ-வில் 595 காலிபணியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளன. வாரந்தோறும் மாதிரி தேர்வும், மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் கூறினார்.


