News December 6, 2024
பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கு 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். கல்வி தகுதியாக குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
காரமடை அருகே விபத்து: ஒருவர் பலி

காரமடையை அடுத்த பிரஸ்காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது காரில் நண்பர் நிஷாந்த் என்பவருடன் நேற்றிரவு கட்டாஞ்சி மலை வழியாக தோலம்பாளையம் சென்றுள்ளார். தோலம்பாளையம் புதூர் அருகே கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தின் மோதியதில் கோவிந்தராஜ் பலியானார். நிஷாந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 23, 2025
காந்திபுரத்தில் பாலியல் தொழில்! சிக்கிய 3 பேர்

கோவை, காந்திபுரம் ராம்நகரில் தனியார் விடுதியில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்தது. காட்டூர் போலீசார் ரகசிய தகவலின் பேரில் நேற்று சோதனை நடத்தி, நேபாளைச் சேர்ந்த அதிராம் சவுத்ரி(31), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிஞ்சால்(24), ஹரியானாவை சேர்ந்த யசோதா(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பெண்களை காப்பகத்திற்கு அனுப்பினர்.
News November 23, 2025
கோவையில் கவனத்தை ஈர்த்த படைப்புகள்

கோவை விழாவின் பகுதியாக அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் Art Street நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது. 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஓவியர்கள் 9ம) கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். கல்லில் வரையப்பட்ட ஓவியங்கள், களிமண் மற்றும் மினியேச்சர் கலைப்பாடல்கள், குழந்தைகளின் செயற்பாடுகள் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.


