News January 2, 2025

பள்ளி வேன் சக்கரம் முறிந்து விபத்து

image

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் வேன் சக்கரம் முறிந்து இன்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் உயிர்த்தப்பினர். வேன் சக்கரம் முறிந்ததில் சுமார் 25 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவத்தின் போது மற்ற வாகனங்கள் வராததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News September 18, 2025

திண்டுக்கல்லில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

image

திண்டுக்கல் மக்களே.., நீங்கள் வேலை தேடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை(செப்.19) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 6381552624 எனும் எண்ணை அணுகவும். பதிவு செய்ய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 18, 2025

திண்டுக்கல்லில் சடலம் கண்டெடுப்பு!

image

திண்டுக்கல்: பழனியை அடுத்த பெரியவுடையார் கோயில் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலமாக கிடந்தவர் அரைக்கால் டவுசர், துண்டு அணிந்திருந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி முதியவரின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 18, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!