News November 21, 2024
பள்ளி வளாகத்தில் தாக்குதல்

மதுரை, பனங்காடியைச் சேர்ந்தவர் +2 மாணவர். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கிறார். சில நாட்களாக அவரை சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததோடு அநாகரிக செயல்களிலும் ஈடுபட்டனர். அம்மாணவர்கள் குறித்து தலைமையாசிரியரிடம் மாணவனின் தந்தையும், சித்தப்பாவும் புகார் அளித்தனர். அப்போது அவரது சித்தப்பா மாணவனை தாக்க, ஆத்திரமுற்ற சக மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கினர். தலைமையாசிரியர் இருதரப்பையும் கண்டித்தார்.
Similar News
News December 8, 2025
மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (07.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News December 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 7, 2025
மதுரை: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


