News March 6, 2025
பள்ளி மாணவியை வெட்டிய சித்தப்பா

பேரணாம்பட்டை அடுத்த ஓங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்.இவரது தம்பி சுரேஷ்பாபு.இருவருக்கும் குடும்ப பிரச்னை உள்ளது.கடந்த 4ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. குமாரின் மகளான 14 வயது மாணவி, சுரேஷ்பாபு நிலம் வழியாக சென்றார். இதைக் கண்ட சுரேஷ்பாபு, அவரது மனைவி மேகலா ஆகியோர் மாணவியை தாக்கி கத்தியால் தலையில் வெட்டியதில், மாணவி பலத்த காயமடைந்தார். அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Similar News
News December 27, 2025
வேலூர்: பால் வியாபாரி பைக் விபத்தில் பலி!

கே.வி.குப்பம் தாலுகா பி.கே.புரம் மேல் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். பால் வியாபாரியான இவர், காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் குடியாத்தம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் வந்த பைக் மகாலிங்கத்தின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 27, 2025
வேலூர்: லாரி மோதி மூதாட்டி பலி!

திருவலம் பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று மாதாண்டகுப்பம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கங்கையம்மாள் (70) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பொன்னை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 27, 2025
வேலூர்: பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு!

குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் முத்து (24). இவர் கடந்த ஆண்டு 10 வயது சிறுமியை ஏரிக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த புகாரில் குடியாத்தம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து முத்துவை கைது செய்தனர். வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று முத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


