News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 2, 2025
சென்னையில் வரப்போகும் RRTS ரயில்கள்

சென்னையில் மெட்ரோவிற்கு இடையே இன்னொரு பக்கம் RRTS ரயில் சேவையும் வர உள்ளது. இதற்கான சர்வே பணிகள் தொடங்கி உள்ளன. பரந்தூரைச் சென்னையின் மையப்பகுதியுடன் இணைக்கும் வகையில் இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. மொத்தமாக மூன்று வழித்தடங்களில் உருவாக்கிட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விடப்பட்டு உள்ளது.
News November 2, 2025
இன்று களைகட்டப்போகும் மெரினா!

சென்னை மெரினா கடற்கரையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (நவ.2) மாலை 5.00 மணிக்கு மயிலாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மெரினா போக நினைக்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 2, 2025
சென்னை: கணவன் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த துயரம்!

அயனாவரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். மனைவி சுகனேஷ்வரி (54). இருவரும் நேற்றிரவு பைக்கில் சைதாப்பேட்டை சின்னமலை சிக்னலில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது சிக்னல் விழுந்ததும் அருகே நின்றிருந்த லாரியை டிரைவர் இயக்கியதில் பைக்கின் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி பைக் சாய்ந்ததில் சுகனேஷ்வரி சாலையில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


