News May 15, 2024
பள்ளி மாணவர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசினை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 6, 2026
வேலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News March 5, 2026
வேலூர்: விரக்தியில் இல்லத்தரசி தற்கொலை

குடியாத்தம் கூடநகரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி ஜமுனா. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ஜமுனா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.