News May 15, 2024
பள்ளி மாணவர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசினை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 19, 2025
வேலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News December 19, 2025
வேலூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

வேலூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) இங்கு கிளிக் செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2.) Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3) “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 19, 2025
சைபர் கிரைம் குற்றம் குறித்து விழிப்புணர்வு பேனர்

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான கிரீன் சர்க்கிள், சில்க்மில், பழைய பஸ் நிலையம், டோல் கேட், ஸ்ரீபுரம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் அவசர எண் (1930), இணையதள முகவரி ஆகியவை உள்ளன.


