News September 27, 2024
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ரங்கராஜ் என்பவரை விசாரணை செய்தபோது அவர் பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து ரூ.500 மதிப்புள்ள 100 கிராம் அளவுள்ள 10 பொட்டலங்களை ( தலா 10 கிராம் )பறிமுதல் செய்த அரும்பாவூர் காவல்துறையினர் எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News December 8, 2025
பெரம்பலூர்: கள்ளச்சாராயம் காய்ச்சல்-ஒருவர் கைது

பெரம்பலூர் மாவட்டம், புது நடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் தனது வயலில் கள்ளசாராயம் காய்ச்சுவதற்காக பேரலில் 30 லிட்டர் கள்ளச்சாராயத்தை ஊறல் போட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை அப்பகுதியில் ரோந்து சென்ற பெரம்பலூர் ஊரக காவல் துறையினர் கண்டறிந்து ராஜேந்திரனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 8, 2025
பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் பெரம்பலூர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (30), ரஞ்சன்குடி ராதாகிருஷ்ணன் (22) ஆகியோர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள மின் கம்பி உரசியதில் இருவரும் கடும் பாதிப்படைந்தனர். இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது மணிகண்டன் செல்லும் வழியிலே உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு, கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்வை (07.12.2025) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, நம் நாட்டிற்காக பாடுபடும் வீரர்களின் நலனுக்காக, அனைவரும் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்க வேண்டுகிறோம் என்று நிதி உதவி கோரிக்கை வைத்தார்.


