News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 20, 2025

9-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி

image

தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(22) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவி கர்ப்பமான நிலையில் பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. விசாரணையில், மாணவிக்கு வயது 16 என தெரியவந்ததை அடுத்து, பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

News April 20, 2025

கோவையில் யானை தாக்கி முதியவர் பலி!

image

கோவை, காளம்பாளையம், தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, பின் மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, புதர் மறைவில் மறைந்திருந்த குட்டியுடன் கூடிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அவர் பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!