News March 28, 2025
பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <
Similar News
News December 12, 2025
திருவள்ளூர்: 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

திருவள்ளூர்: மூலக்கடையில் 15 வயது சிறுமி, நேற்று (டிச.11) புழல் பகுதி உறவினர் வீடு சென்று தன் வீடு செல்ல புழலில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த லாரி மூலக்கடை செல்வதாக டிரைவர் கூறவே நம்பி சிறுமி லாரியில் ஏறினார். சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி சிறுமியை லாரியில் அந்த டிரைவர் பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில், டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
News December 12, 2025
திருவள்ளூர்: மணமகளுக்கு ரூ.25,000 சூப்பர் திட்டம்!

திருவள்ளூர் மக்களே.. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் நடத்தும் பொழுது மிகுந்த உதவியாக அமைகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
News December 12, 2025
பொன்னேரி: முடிதிருத்தம் தொழிலார்கள் முற்றுகை

திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் அடாவடி வசூல் செய்வதாகவும், தொழில் வரி வசூல் செய்வதில் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்களை மிரட்டுவதாகவும் கூறி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(டிச்.12) 50க்கும் மேற்பட்டோர் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


