News March 28, 2025
பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News December 2, 2025
செங்கல்பட்டு: வெவ்வேறு இடங்களில் 2 பேர் பலி!

மறைமலை நகர் ஜி.எஸ்.டி. சாலையில் தனியார் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற தென்காசியைச் சேர்ந்த முத்துசெல்வன் (22) உயிரிழந்தார்; அவரது 2 நண்பர்கள் படுகாயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில், சிங்கப்பெருமாள் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலியானார். இந்த 2விபத்துகள் குறித்தும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
செங்கல்பட்டு: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக இன்று (டிச.2) காலை 8 மணி வரை செங்கல்பட்டில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டி. சினேகா உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 2, 2025
தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் நீட்டிப்பு

தாம்பரம் – திருச்சி – தாம்பரம் இடையே தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் (வண்டி எண்: 06190 / 06191) பயணிகளின் வசதிக்காக இன்று(டிச.2) முதல் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி, சனிக்கிழமை உள்ளிட்ட 5 நாட்கள் மட்டுமே இந்த ரயில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


