News March 27, 2025
பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <
Similar News
News November 6, 2025
வேலூர்: பாதி வழியிலே பழுதடைந்த 108

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு இன்று (நவ.06) அழைத்துச் சென்றனர். அப்போது சாலைகளில் ஆம்புலன்ஸ் பழுதடைந்து நின்றதால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
News November 6, 2025
வேலூர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வருகிற நவம்பர் 15-ம் தேதிக்குள் வேளாண் அடுக்கக அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே பி.எம்.கிசான் தொகையை தொடர்ந்து பெற முடியும். எனவே இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் உடனடியாக ஆதார் கார்டு, சிட்டா ஆகியவற்றுடன் அருகே உள்ள பொது சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
வேலூர்: கர்பிணி பெண் கிணற்றில் குதித்து பலி!

கே.வி.குப்பம், பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் யோகானந்தன். இவரது மனைவி சாந்தினி (27). கர்ப்பிணியான இவர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் நேற்று (நவ.05) மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


