News December 6, 2024
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், மாணவர்கள் நலன் கருதி விழுப்புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் (டிச.9) முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால், இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
விழுப்புரம்: வளர்ப்பு நாயால் முதியவருக்கு கொலை மிரட்டல்!

விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணா தேவநாதன். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி இவரது நாய் பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் பற்குணன், கிருஷ்ண தேவநாதனை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 3, 2025
விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஒட்டிய நபர் – தட்டி தூக்கிய போலீஸ்!

விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிவேகமாக பைக் ஓட்டிய பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அதிவேகமாக யாராவது பைக் ஓட்டுகின்றனரா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.