News December 5, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று (டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் வெள்ளத்தால், வீடு, உடைமைகளை இழந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை பாதிப்புகளை சீர் செய்யும் பணி நடப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு லீவ் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News September 18, 2025

நலமான பெண்கள் வளமான குடும்பம் மருத்துவ முகாம்

image

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று முதல் அக்டோபர் 2 ஆம் தேதிவரை ‘நலமான பெண்கள் வளமான குடும்பம்’ என்ற சிறப்பு மருத்துவ முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
சிறுவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இன்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கலந்து கொண்டு மகளிருக்கு சுகாதார பெட்டகங்களை வழங்கினார்.

News September 18, 2025

மலை குன்றில் சாராயம் காய்சியவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோ.குப்பம் கிராமம் நந்தன் கால்வாய் அருகே மலை குன்றில் சாராயம் காய்ச்சுவதற்காக 20 லிட்டர் அளவு கொண்ட ஊரல்களும், 2 லிட்டர் சாராயம் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை வைத்திருந்த சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை போலீசார் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News September 18, 2025

மின்மாற்றியை இடம் மாற்றிய போலீசார்: பாராட்டிய எஸ்.பி

image

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த மின்மாற்றியை, யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் வேறு இடத்துக்கு மாற்றி நடவடிக்கை எடுத்த போக்குவரத்து காவலர்களை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!