News September 14, 2024
பள்ளி கட்டடத்தின் உறுதி குறித்து அறிக்கை அளியுங்க: கலெக்டர்

திண்டுக்கல்: பள்ளிகட்டடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கலெக்டர் பூங்கொடி கேட்டு கொண்டார். அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள், அடிப்படை வசதி குறித்து குழு உறுப்பினர்கள் துறை சார்ந்து ஆய்வு செய்து
உடனடியாக நிறைவேற்றி அறிக்கை சமர்பிக்க வேண்டும். வகுப்றை, கட்டடத்தின் உறுதி குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தபட்டது.
Similar News
News February 23, 2026
கொடைக்கானலில் பயங்கரம் – தனிப்படை அமைப்பு!

கொடைக்கானலில் திரைப்படத் துணை நடிகர் விஷ்ணு பிரியாவின் தந்தை சூரியநாராயணன், மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். விடுதி பணியாளர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, இந்தத் துணிகரச் செயலில் 5 பேர் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் 50 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகக் காவல் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
News February 23, 2026
திண்டுக்கல்: உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் இன்று (23.02.2026) முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5 வயது வரையிலான குழந்தைகளின் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக நடைபெறும் இம்முகாமை, மாவட்ட ஆட்சியர் சரவணன் ஏ.எம்.சி சாலை மையத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். இதனை ஷேர் பண்ணுங்க
News February 23, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல்: பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என அலைபேசிக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதள இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் பணத்தை இழக்கக்கூடாது. சந்தேகமான தகவல்கள் குறித்து உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் செய்யலாம்


