News February 18, 2025
பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
Similar News
News November 21, 2025
காஞ்சிபுரம்: 10th போதும், உளவுத்துறையில் வேலை!

காஞ்சிபுரம் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 21, 2025
காஞ்சி: 7 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை!

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் சேந்தமங்கலத்தை சேரந்தவர் ராணி (70) கடந்த 12ஆம் தேதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து விசாரித்த சுங்குவார்சத்திரம் போலீசார், பாப்பாங்குலி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் 7 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்ய 4 மாதங்களாக திட்டமிட்டுள்ளார் என தெரியவந்தது.
News November 21, 2025
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்!

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வரும் 21.11.2025 அன்று 9.30 முதல் 3.00 மணி வரை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது!
தகுதி: 8-ம் வகுப்பு, 10th, 12th, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
வேலை தேடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தை அணுகவும்.


