News February 18, 2025
பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பிப்.22ஆம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
Similar News
News November 24, 2025
எஸ்ஐஆர் பணி அலுவலர்களுக்கு ஆட்சியர் சதீஸ் பரிசு

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (நவ.24) பொன்னாடை அணிவித்து, பரிசுகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி.கவிதா, தேர்தல் வட்டாட்சியர் திரு.அன்பு ஆகியோர் இருந்தனர்.
News November 24, 2025
பத்திரிக்கையாளர் அலுவலகத்தை திறந்த எம்.பி ஆ.மணி

தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஒதுக்கியுள்ள பத்திரிகையாளர் அலுவலகம் திறப்பு விழா (நவ.24)இன்று நடைபெற்றது. தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ரெ.சதீஷ் மற்றும் வழக்கறிஞர் ஆ.மணி எம்பி ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
News November 24, 2025
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆட்சியர் சதீஸ் சான்றிதழ்!

இன்று (நவ.24) தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அத மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தருமபுரி,அரூர், காரிமங்கலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தனர். இந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆட்சியர் சதீஸ், (நவ-24) சான்றிதழ்களை வழங்கினார்.


