News March 6, 2025
பள்ளிகள் அருகில் புகையிலை -136 கடைகளுக்கு சீல்

சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 136 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கடைகளில் இருந்து ரூபாய் 2.30 லட்சம் மதிப்பிலான 251 புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு ரூபாய் 42.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News March 7, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மார்ச் 6 இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News March 6, 2025
சேலம் வழியாக ஹோலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக வரும் மார்ச் 07, 14 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 10, 17 தேதிகளில் ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 6, 2025
சேலத்தில் 2-வது நாளாக சதமடித்த வெயில்!

சேலம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 06) 100.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். பகல் நேரத்தில் சாலைகளில் ஆள் நடமாட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நேற்று 100.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.