News February 16, 2025
பள்ளிகளில் பாலியல் தொந்தரவு டோல்பிரீ நம்பர்

பாலியல் தொந்தரவு குறித்து 14417 என்ற டோல்-ஃப்ரீ எண்ணில் அச்சமின்றி புகார் அளிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அண்மைய காலமாக கல்வி நிறுவங்களில் மாணவ- மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Similar News
News December 4, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. ரூ.85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <
News December 4, 2025
தூத்துக்குடி: நகை பறித்த 2 பேர் கேரளாவில் கைது

தூத்துக்குடியில் கடந்த வாரம் ஒரே நாளில் ரஹமதுல்லா புரத்தைச் சேர்ந்த அமுதா மற்றும் மாதவன் நகர் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி ஆகியோரிடம் 18 பவுன் தங்க நகையை 2 பேர் பறித்து சென்றனர். இது சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில் கேரளாவில் பதுங்கி இருந்த தூத்துக்குடி பண்டாரம் பட்டி சேர்ந்த பாரத், அஜித்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.
News December 4, 2025
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (டிச.4) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE பண்ணுங்க.


