News August 2, 2024

பல்லாவரம் – கூடுவாஞ்சேரி ரயில் சேவை ரத்து

image

நாளை (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சென்னை – பல்லாவரம் இடையே மட்டும் ரயில் சேவை இயக்கப்படும். மேலே குறிப்பிட்ட நாட்களில், பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.

Similar News

News August 11, 2025

செங்கல்பட்டில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து நாளை (ஆகஸ்ட் 12) செங்கல்பட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர்!

News August 11, 2025

ஏசி மின்சார பேருந்து சேவை தொடக்கம்

image

சென்னையை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏசி மின்சார பேருந்து சேவை செங்கல்பட்டில் தொடங்கப்பட உள்ளது. ரூ. 233 கோடி மதிப்பீட்டில் 55 ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து இந்த சேவையைத் தொடங்கி வைக்கிறார்.

News August 11, 2025

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரவிருக்கும் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் தேங்குவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் விரைவில் ஆய்வுகளைத் தொடங்கி, மழை பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலம், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

error: Content is protected !!