News December 4, 2024

பல்லடம் கொலை: 850 பேரின் விவரங்கள் சேகரிப்பு

image

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அலமேலு மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு குற்ற பதிவேடுகளில் இருந்து 850 பேரின் விவரங்களை பெற்று அதனுடன் பொருத்தி விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

திருப்பூரில் கொலை! அதிரடி உத்தரவு

image

திருப்பூர், அம்மாபாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பாண்டியனிடம் பீடி கேட்டு ஏற்பட்ட தகராறில் கடந்த ஜூலை மாதம், 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் அவரை கொலை செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இளம் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 2 ஆண்டுகள் இருவரையும் சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News December 9, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேர கொள்ளை சம்பவங்களை தடுத்திடும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் மாநகர காவல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 9, 2025

தாராபுரத்தில் சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

image

தாராபுரம் அருகே உள்ள ராமபட்டினத்தைச் சேர்ந்த செல்லதுரை என்ற கூலித் தொழிலாளியின் மகள் தாரணி. இவர் வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து பெற்றோர் இருவரும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தாரணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!