News June 27, 2024

பல்நோக்கு மருத்துவ முகாம்: ஆட்சியர் துவக்கம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் காவேரி மருத்துவமனை மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டினம் கிளை சார்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கிருஷ்ணகிரி சேலம் பைபாஸில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆட்சியர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் பலர் கலந்துகொண்டனர்

Similar News

News January 6, 2026

கிருஷ்ணகிரி பயணிகளுக்கான முக்கிய தகவல்!

image

கிருஷ்ணகிரி மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். <>இங்கே கிளிக்<<>> செய்து மத்திய அரசின் appஐ டவுன்லோட் செய்யுங்கள். அதில் நீங்கள் பயணித்த ரயில் எண், எந்த நிலையத்தில் இறங்குநீர்கள் போன்ற அடிப்படை விவரத்தை பதிவிட்டால் போதும். சிம்பிள், உங்கள் பொருள் வந்து சேரும். SHARE

News January 6, 2026

கிருஷ்ணகிரியில் பொங்கல் பரிசு வரலையா? உடனே CALL!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

ஓசூரில் திக் திக் நிமிடங்கள்!

image

ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே வருகைப் பதிவேடு விவகாரம் தொடர்பாக அகதி ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் நீண்ட போராட்டத்திற்குப் பின் அவரைப் சமாதானப்படுத்தி பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

error: Content is protected !!