News May 4, 2024
பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நீடாமங்கலத்தில் பத்மஸ்ரீ ராமன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கத்தில் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்க தீர்மானிக்கப்பட்டது.
Similar News
News November 20, 2024
திருவாரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
திருவாரூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் கலந்து கொள்ள 18 வயது நிரம்பியவர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்றுடன் நேரில் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News November 20, 2024
கலைத்திருவிழா போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்
திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும் திட்டமிட்டபடி இன்று மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டிகள் மழையின் காரணமாக சற்று தாமதமாக 11 மணியளவில் துவங்கும் எனவும், பங்கேற்க கூடிய மாணவர்களை பொறுப்பாசிரியர்கள் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் எனவும் திருவாரூர் முதன்மை கல்வி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2024
விவசாயிக்கு இழப்பீடு பதிவு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ரமேஷ், நீடாமங்கலம் இந்தியன் வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார் கடனை முழுமையாக செலுத்திய பின்பும்,ஆர்.சி புத்தகத்தை வழங்காத வங்கி மீது மன்னார்குடி நுகர்வோர் சங்கத்தின் வேல்முருகன் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில், இழப்பீடாக ரூ.1.10 லட்சம் மற்றும் ஆர்.சி புத்தகத்தை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் வங்கிக்கு நேற்று அதிரடி உத்தரவிட்டது