News April 26, 2024

பறவை காய்ச்சல் முகாம் 90 நாட்கள் செயல்படும்

image

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் தமிழக எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் செக்போஸ்ட் அமைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான படந்தாலுமூடு செக் – போஸ்டில் இந்த முகாம் துவங்கப்பட்டுள்ளது. முகாம் 90 நாட்கள் செயல் படும் என அறிவித்துள்ளது. 

Similar News

News November 20, 2024

குமரியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#கொல்லமாவடி முத்தாரம்மன் கோயிலில் காலை 11 மணிக்கு கலச பூஜை, மாலை 6-க்கு பகவதி சேவை, இரவு 8-க்கு வாஸ்து ஹோமம் நடைபெறுகிறது. #காமச்சன் பரப்பு பெருமாள் கோயிலில் காலை 9 மணிக்கு தோட்டுக்காரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபாபிஷேகம். #கிண்ணிக்கண்ணன்விளை சடச்சி பதியில் மாலை 6 மணிக்கு பணிவிடை, திருஏடுவாசிப்பு. #மார்த்தாண்டம் கிறிஸ்து அரசல் ஆலயத்தில் மாலை 6.45 மணிக்கு நற்செய்தி கூட்டம்.

News November 20, 2024

எழும்பூர் to நாகர்கோவில் ரயில் தாம்பரத்திலிருந்து..!

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(நவ.,21) முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாகர்கோவில் to எழும்பூர் வாராந்திர அதிவிரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்திலிருந்து இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும், மறு மார்க்கத்தில் 22ஆம் தேதி மாலை 4:15 மணிக்கு புறப்படும். SHARE IT.

News November 20, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10 மணிக்கு கோழிவிளை சந்தியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வதாக கூறியும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களை கண்டித்தும் தொடர் உண்ணாவிரதம். #குமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் ஆபரேஷன் சி விஜி இன்றும் நாளையும்( 20, 21) ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. #உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவட்டார் தாலுகாவில் ஆட்சியர் ஆய்வு.