News April 12, 2025
பறவையினம் தேர்வு செய்ய அழைப்பு

சேலம் மாவட்டத்திற்கான பறவையினம் தேர்வுசெய்ய, பொதுமக்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. சேலம், ஆத்தூர் வனக்கோட்டம் மற்றும் சேலம் பறவையியல் கழகம் இணைந்து நமது சேலத்திற்கான பறவையை தேர்வு செய்ய, பொதுமக்களிடம் விருப்பங்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் சேலத்தின் பறவையினை தேர்வு செய்ய இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் மே-4 வெளியிடப்படும்.
Similar News
News November 24, 2025
சேலத்தில் அம்மா திட்டியதால் நேர்ந்த சோகம்!

சேலம் பூமி நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் நவீனா(29). இவர் வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட சண்டையில் அவரது தாய் நவீனாவை திட்டியுள்ளார். வயிற்று வலியாலும், அம்மா திட்டியதாலும், மனம் உடைந்த நவீனா வீட்டில் இருந்த அனைத்து மாத்திரைகளையும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 24, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.