News February 16, 2025
பறவைகள் கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்கலாம்

மதுரை சர்வதேச அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வு 4 நாட்கள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் இன்று மாலை 4 மணிக்கு இதில் இலவசமாக பங்கேற்று பலவகை பறவைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் இலவசமாக பங்கேற்கலாம் என மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
மதுரை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் இங்கு <
News October 15, 2025
அழகர்கோவில் உண்டியல் திறப்பு

மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் கோயிலில் மாதாந்திர உண்டியல் என்னும் பணிக்காக துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூ.48 லட்சத்து 98 ஆயிரத்து 950 ரொக்கம், 25.5 கிராம் தங்கம், 200.64 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றன. என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
News October 15, 2025
மதுரை: 65 கைதிகளுக்கு தீபாவளி ‘பரோல்’

தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட மதுரை கைதிகள் பலர் சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தனர். டி.ஐ.ஜி., முருகேசன், எஸ்.பி. சதீஷ்குமார் தலைமையிலான குழு, இதற்கு முன் பரோலில் சென்றபோது கைதி நடந்த விதம், நன்னடத்தை போன்றவை ஆய்வு செய்தது. 65 பேருக்கு பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டது. முதன்முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு 6 நாட்களும், ஏற்கனவே சென்று வந்தவர்களுக்கு 3 நாட்கள் பரோல் வழங்க முடிவு.