News March 28, 2024
பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.6.16 லட்சம் விடுவிப்பு

தஞ்சாவூரில் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.16 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாகத் விடுவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
தஞ்சாவூர்: இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை!

ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரை கடந்த 2024-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மருமகன் ராஜ்குமார் (ம) அவரது நண்பர் சரவணகுமார் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
News October 28, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
தீவிரமாக நடைபெற்று வரும் வாழை சாகுபடி பணி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் வாழை சாகுபடி பணியில் மும்முரமாக இறங்கி உள்ளனர். இந்த வாழை சாகுபடி மூலம் அவர்களுக்கு வாழை இலை, வாழைப்பூ மற்றும் வாழைப்பழம் போன்ற பல வகையில் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் இதில் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் அவர்கள் தங்கள் நிலங்களில் வாழை கன்றுகளை நற்று பராமரித்து வருகின்றனர்.


