News March 21, 2024
பறக்கும் படை சோதனையில் ஒரு லட்சம் பறிமுதல்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (மார்.21) கண்டமனூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர். இதில் அவ்வழியே வந்த சதீஷ்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News July 8, 2025
உள்ளூர் வங்கியில் வேலை! ரூ.85,000 வரை சம்பளம்

தேனி மக்களே பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். <
News July 8, 2025
தேனி: பல் மருத்துவக் கல்லுாரி மாணவி தற்கொலை

தேனி என்.ஆர்.டி., நகர் பகுதியை சேர்ந்தவர் பவிஷ்யா (20). இவர் மதுரை சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரியில் 2.ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர், பெற்றோரிடம் படிப்பு மிக கடினமாக இருப்பதாக கூறி மன உளைச்சலில் இருந்துள்ளார். தேர்வுக்கு செல்ல இருந்த நிலையில் நேற்று (ஜூலை.7) அதிகாலை மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு.
News July 8, 2025
தேனியில் குடிநீர் பிடிக்க சென்ற இடத்தில் பெண் உயிரிழப்பு

தேனி, துரைச்சாமிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்த்த காளிமுத்து என்பவரது மனைவி பாப்பாத்தி இவர் வீட்டின் முன்பு உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டு சிசிச்சை பலனின்றி இறந்தார். இந்த இறப்பு குறித்து இவரது மகன் முருகன் கடமலைகுண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீஸார் விசாரணை.