News March 21, 2024

பறக்கும் படை சோதனையில் ஒரு லட்சம் பறிமுதல்

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (மார்.21) கண்டமனூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர். இதில் அவ்வழியே வந்த சதீஷ்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News November 25, 2025

கேரளாவுக்கு முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை

image

பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை 1 மணிக்கு அணை நீர்மட்டம் 138 அடியை நெருங்கியதால் கேரளாவுக்கு எச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை 6 மணி அளவில் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் கேரளாவுக்கு முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்:

image

தேனி மாவட்ட அணைகளின் (நவ.25) நீர்மட்டம்: வைகை அணை: 61.75 (71) அடி, வரத்து: 2538 க.அடி, திறப்பு: 869 க.அடி, பெரியாறு அணை: 139.80 (142) அடி, வரத்து: 3999 க.அடி, திறப்பு: 800 க.அடி, மஞ்சளார் அணை: 45.30 (57) அடி, வரத்து: 53 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 126.28 (126.28) அடி, வரத்து: 160 க.அடி, திறப்பு: 160 க.அடி, சண்முகா நதி அணை: 43.30 (52.55) அடி, வரத்து: 18 க.அடி, திறப்பு: 14.47 க.அடி.

error: Content is protected !!