News January 23, 2025
பர்கூரில் லஞ்சம் பெற்ற இருவர் கைது

கிருஷ்ணகிரி மலையாண்டஹள்ளி புதூர் கிராமத்தில் நாகராஜ் என்பவரது நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க பர்கூர் தாலுக்கா சார்பு நில அளவை ஆய்வாளர் குமரன் இடைத்தரகர் சுஹேல் மூலம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். நாகராஜ் ரூ.9,000 லஞ்சம் இடைத்தரகரிடம் கொடுத்துள்ளார். ஆய்வாளர் குமரன் இடம் பணத்தை சுஹேல கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் குமரன் மற்றும் இடைத்தரகர் இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News November 9, 2025
கிருஷ்ணகிரி: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுக*
News November 9, 2025
கிருஷ்ணகிரி: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
கிருஷ்ணகிரி மாணவர்களே தயார் ஆகுங்கள்!

காந்தி,நேரு ஆகியோரின் பிறந்தநாளையொட்டி மாணவா்களுக்கு வருகிற நவ.12,13 ஆகிய தேதிகளில் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், காலை 9.30மணிமுதல் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதிபெற்று, பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம் என மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


