News March 10, 2025
பரோடா வங்கியில் வேலை: நாளையே கடைசி

பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News May 7, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.1) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News May 7, 2025
கிருஷ்ணகிரியில் தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

சென்னை சாலையில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல அலுவலகம், கிருஷ்ணகிரி கிளை சார்பில் தொழிலாளர் தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. LPF தொழில் சங்கம் நிர்வாகிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் இணைந்து தொழிலாளர் கொண்டாடினர். கொடி ஏற்றி மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News May 7, 2025
கிருஷ்ணகிரி: இலவச வீட்டுமனை பட்டா பெற சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள கிராமத்தார் மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்துவரும் தகுதியான நபர்களுக்கு, வீட்டு மனைப்பட்டா பெறுவதற்காக நாளை (மே.2) அனைத்து வருவாய் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா பெற விண்ணப்பித்து பயன்பெற திமுக மா. செயலாளர் எம்எல்ஏ மதியழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.