News October 18, 2024

பருவ மழை : ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் கால்நடை வளர்ப்போர் மின் கம்பங்களிலோ, மின் கம்பங்களுக்கு அருகாமையிலோ கால்நடைகளை கட்ட கூடாது, கால்நடைகள் கட்டும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கால்நடை அவசர ஊர்தியின் சேவையை பெற 1962 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 20, 2024

விவசாய நிலத்தில் வட்டாட்சியர் ஆய்வு 

image

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அக்ரஹாரம் ஊராட்சி ஓடக்காடு பகுதியில், இயங்கும் சாயப் பட்டறைகளின் கழிவுகள் நெல் வயல்களில் புகுந்த விவகாரம் தொடர்பான புகாரின் பேரில் குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது குறித்து விவசாய நிலத்தின் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டார்.

News November 20, 2024

நாமக்கல்லில் 25ஆம் தேதி கடையடைப்பு

image

நாமக்கல் பரமத்தி சாலையில் அமைந்துள்ள வணிகர் சங்க அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள வணிகர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானம் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்கு மீண்டும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி 25ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சி முழுவதும் கடைகளை அடைத்து போராட்டம் செய்வதாக முடிவு செய்தனர்.

News November 20, 2024

நாமக்கல்லில் துணை மேயர் அலுவலகம் திறப்பு 

image

நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ளது நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று துணை மேயர் பூபதிக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை எம்பி ராஜேஷ்குமார்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மேயர் மற்றும் திமுக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.