News October 8, 2024
பருவமழை – தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக நிலையில் நாகையில் அவ்வப்பொது மழை பெய்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அவர்கள் பருவ மழையின் போது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் அசம்பாவிதங்கள் பற்றி எந்நேரமும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க 04365-1077 மற்றும் 1800-233-4-233 ஆகிய தொலைபேசி இலவச எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 8, 2025
நாகை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News December 8, 2025
ரூ.1.5 லட்சம் பரிசு: நாகை கலெக்டர் அறிவிப்பு

மகளிர் மேம்பாடு, பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் அவ்வையார் விருது மற்றும் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும் டிச.31-க்குள் விருதுக்கு விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
நாகை: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

நாகை மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <


