News August 4, 2024

பருப்பு, பாமாயில் இம்மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, ஈரோட்டில் உள்ள 7,43,181 ரேஷன் அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.

Similar News

News November 17, 2025

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100 க்கும், சைபர் கிரைம் எண்-1930 க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும், போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News November 16, 2025

ஈரோடு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு எச்சரிக்கை!

image

தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது மற்றும் மீட்பு செய்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது முக்கிய முன்னுரிமையாக உள்ளது.
குழந்தைகள் பணம் சம்பாதிக்காமல், பள்ளிக்கு சென்று அறிவை சம்பாதிக்கட்டும் என மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

News November 16, 2025

பள்ளி வாகனத்தில் சிறார் நூல் தொகுப்பு

image

பழங்குடியினர் நலத்துறை மூலம் பள்ளி குழந்தைகளை அவர்களது இல்லங்களிலிருந்தே அழைத்து வர கடந்த மாதத்தில் பள்ளி வாகனங்கள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 4 வாகனங்களில் ஆசனூர் பள்ளிக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் பயண நேரத்தில் வாகனத்தில் நூலை படிக்கவும், வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கவும் இந்த வாகனத்தில் சிறார் நூலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.

error: Content is protected !!