News April 30, 2025

பரமக்குடி: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது

image

பரமக்குடி அருகே போகலூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 29) ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.2,56,000 லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசை, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். மேலும், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 4, 2025

ராமநாதபுரம்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

ராமநாதபுரம் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04657 230657 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News December 4, 2025

ராமநாதபுரம்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக ராமநாதபுரத்தில் 173-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் .SHARE பண்ணுங்க.

News December 4, 2025

ராமநாதபுரம்: கையும் களவுமாக சக்கிய அரசு அதிகாரி

image

சாயல்குடி பகுதியில் சேர்ந்தவர் தன்னுடைய புதிய ரேஷன் கார்டு வந்ததாக மூக்கையூர் ரேஷன் கடை பணியாளர் முத்துலட்சுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.3500 வேண்டும் என்று கூறியதால் கொடுக்க விரும்பாத நபர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்தார். இந்நிலையில் ரசாயனம் தடவிய ரூ.3000 முத்துலட்சுமியிடம் கொடுக்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!