News March 20, 2025
பரமக்குடியில் லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

பரமக்குடி தாலுகா, சின்ன நாகாச்சி கிராமத்தை சேர்ந்த ஒரு முதியோர் பிப்ரவரி முதல் உதவி தொகை பெற்று வருகிறார். இதை பெறுவதற்கு தான் பரிந்துரைத்ததாக கூறி சின்ன நாகாச்சி வருவாய் கிராம உதவியாளர் அம்பேத் ராணி புகார்தாரரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அம்பேத் ராணியை ராமநாதபுரம் லஞ்சம் ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 28, 2025
தாம்பரம் – ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில்

தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய இரயில் இயக்க இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல்.6ம் தேதி முதல் புதிய ரயில் பயணத்தை துவக்க இருப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார். புதிய ரயில் தாம்பரத்திலிருந்து, சிதம்பரம் , திருவாரூர் வழியாக இராமேஸ்வரம் வந்தடைய நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. *ஷேர் பண்ணுங்க
News March 28, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (மார்ச்.27) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 27, 2025
மரகதநடராசர் சந்தனகாப்பு கலைக்கப்பட்டு காட்சி

இராமநாதபுரம், திருஉத்திரகோசமங்கையில் வருகின்ற 4.4.2025 வெள்ளிக்கிழமை அன்று திருஉத்திரகோசமங்கையில் கும்பாபிஷேகம் நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு ஆண்டிற்கு ஒருநாள் மட்டும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் மரகதநடராசர், ஏப்.1 மாலை 5 மணி முதல் ஏப்.4 மாலை வரை சந்தனகாப்பு கலைக்கப்பட்டு மரகதமேனியாக காட்சியளிக்க உள்ளார். (இக்கோயிலுக்கு வருவோருக்கு நோய் தீரும் என்பது நம்பிக்கை) * மறக்காம ஷேர் செய்யுங்கள்*