News March 7, 2025
பரபரப்பான சூழ்நிலையில் காவல்துறை செய்தி வெளியீடு

எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது, கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. முனீஸ்வரன் என்பவர் முன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து 5¾ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 யும், மகேஷ் கண்ணனிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகள், ரூ.15,000 மீட்கப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2025
தூத்துக்குடியில் பெண்களை போற்றும் ஊர்! தெரிஞ்சிக்கோங்க

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானந்தலில் நன்குடி வேளாளர் சமூகத்தினர் உள்ளனர். இங்கு குழந்தை பிறந்தால் குலவை சத்தமிடுவர். பெண் குழந்தை பிறந்தால் அதிக குரல் எழுப்பி குலவை சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அரசு பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே இவர்கள் பெண்களுக்கு சம பங்கு சொத்து வழங்கி வருகின்றனர். கோவில் வரி, வீட்டு வரி எல்லாமே பெண்கள் பெயரில்தான்.*புதுசுனா ஷேர் பன்னுங்க*
News March 8, 2025
தென்னகத்து சார்லி சாப்ளினின் நினைவு தினம்

“தென்னகத்து சார்லி சாப்ளின்” என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சந்திரபாபு வின் நினைவு தினம் இன்று (மார்ச்.08). தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில், சிறந்த பாடகர்களில் ஒருவராக விளங்கியவர். தூத்துக்குடி மண்ணில் பிறந்த நடிகர் சந்திரபாபு வின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
News March 8, 2025
தூத்துக்குடி :மானிய எரிவாயு திட்டம் ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெற்றவர்கள் முதல் சிலிண்டருக்கு பின் மாற்று சிலிண்டர்கள் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு எரிவாயு நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதம் கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் பயனாளிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் தங்களது விவரங்களை முகவர்களிடம் புதுப்பிக்க வேண்டும். தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.