News August 6, 2024
பரந்தூர் விமான நிலையம் அமைய முழு காரணம் மாநில அரசு

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றியுள்ள 13 கிராமங்களை ஒன்றிணைந்து 5000 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்கவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்தது. இதையடுத்து ஏகனாபுரம் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தியதுடன், மத்திய விமான அமைச்சகத்திற்கு மறுபரிசீலனை செய்ய கோரி கடிதம் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், விமான நிலைய அமைப்பதற்கும் முழு காரணம் மாநில அரசு என பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
காஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை ஊராட்சி மற்றும் தண்டலம் ஊராட்சி திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் செங்காடு ஊராட்சி ஆகிய இடங்களில் செப்டம்பர் 16 காலை 9 மணி முதல் தொடங்கி உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News September 15, 2025
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 418 மனுக்கள் – ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற ஆட்சியர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து 418 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
News September 15, 2025
காஞ்சியில் புதிய கட்சி தொடங்கிய மல்லை சத்யா

இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்தநாள் முப்பெரும் விழாவில் மல்லை சத்யா புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். கட்சியின் கொடியை அறிமுகம் செய்தவர் கட்சியின் பெயரை நவ.20ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். கருத்துவேறுபாடு காரணமாக மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மல்லை சத்யா இன்று புதிய கட்சி தொடங்கியுள்ளார்.