News March 28, 2025
பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை நீட்டிக்க மனு

பரந்துாரில் 2ஆவது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளதால், சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை பூந்தமல்லியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க கோரி, வழக்கறிஞர் பெர்ரி முதல்வருக்கு நேற்று (மார்.27) மனு அனுப்பினார்.
Similar News
News October 31, 2025
காஞ்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். கூட்டங்களில் மழைநீர் சேகரிப்பு, டெங்கு தடுப்பு, நிதி அறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
News October 31, 2025
பிள்ளைப்பாக்கத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் இன்று (அக்.31) திருப்பெரும்புதூர் ஒன்றியத்திலுள்ள பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் சிவன் கோயில் அருகில் காலை நேரத்தில் தொடங்கும். பொதுமக்கள் தங்களது மனுக்கள் மற்றும் குறைகளை அளித்து உடனடி தீர்வுகளை பெறலாம் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
News October 31, 2025
காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.1 சனிக்கிழமை காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். இதில் கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார். இந்தக் கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட எண்ணற்ற விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.


