News October 25, 2024

பயிர் காப்பீடு செய்ய நவ.,15 கடைசி நாள்: நெல்லை கலெக்டர்

image

இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராமல் ஏற்படும் சேதங்களில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. இதில் உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் நவ.,15 ஆகும். அதற்குள் விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று கேட்டுக்கொண்டார்.

Similar News

News November 20, 2024

போலீயான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்

image

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தொலைக்காட்சி ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி பொய்யான செய்தி வெளியிட்டு வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில் அது குறித்த அறிவிப்பு பேரிடர் மேலாண்மை பிரிவு மூலம் வெளியிடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

நெல்லை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்கள் தடுக்க நாள்தோறும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் காவல் உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 20, 2024

மக்கள் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் – ஆட்சியர்

image

நெல்லையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ளபெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் கூறியுள்ளார்.